Sunday, September 14, 2008

Saturday, May 3, 2008


ஒரு கதை கேள் தோழி.ஒரு வசந்தம் மட்டுமே வாழ்கிறரோமியோக்களின் கதை கேள்.காகிதப் பூக்களின் நகரத்தில்காதலில் கசிந்துதேனுக்கு அலைந்தது பட்டாம் பூச்சி.என் இனிய பட்டாம் பூச்சியே சுவர்க் காடுகளுள் தேடாதே.நான் வனத்தின் சிரிப்பு வழுக்குப் பாறைகளில் கண்சிமிட்டும்வானவில் குஞ்செனப் பாடியது பிஞ்சுக்கு ஏங்கிய காட்டுப் பூ.ராணித் தேனீக்களே எட்டாத கோபுரப் பாறைகளில் இருந்துகம கமவென இறங்கியது அதன் நூலேணி.வாசனையில் தொற்றிவந்த வண்ணத்துப் பூச்சியிடம் இனிவரும் வசந்தங்களிலும்தேனுக்கு வா என்றது பூ.காதல் பூவே வசந்தங்கள்தோறும்ஊட்டுவேன் உனக்கு மகரந்தம் என்கிறபட்டாம் பூச்சியின் எதிர்ப்பாட்டில்உலகம் தழைத்தது.நிலைப்ப தொன்றில்லா வாழ்வில் கடக்கையில் பெய்கிற முகிலே உறவுகள்.

lovers day spl



வர வேண்டும் அவள்

கதவைத் திறந்து வைக்கிறேன்காற்று மெல்ல நுழையுதுகாற்றில் அவளின் நறுமணம்மூச்சில் நிறைத்துக் கொள்கிறேன் கனவில் வந்து சிரிக்கிறாள்கண்கசக்கி அழுகிறாள்நிஜத்தில் தொலைவில் இருக்கிறாள்நெருங்கி என்று வருவளோ?காற்றில் ஆடும் இறகுபோல் - மனம்ஓர் இடத்தில் இல்லையே!இரவு மிகவும் நீளுதே! - இந்தத்தனிமை என்னைக் கொல்லுதே!அருகிருந்த போதிலே - மனம்அமைதி கொண்டிருந்தது!தொலைவில் சென்று விட்டதும்துவண்டு மிகவும் ஏங்குது!போதும் இந்தத் தண்டனைபூவே இங்கு வந்திடுஉனது மழலைக் குறும்புகள்ஒவ்வொன்றாக நிகழ்த்திடு!வலிக்காமல் என்னைக் கிள்ளடி - உன்மெல்லிதழால் செல்லமாய்க் கடி.வலிக்குமாறு கட்டிக் கொள்ளடி - உன்முத்தத்தாலே என்னை மூழ்கடி!

lovers day spl



காதலை அறியாக் காதலர்

அவளையே நினைத்து உருகுகையில்அவளே வந்தாள் - ஆகாஇனியேது கவலையென்றதுஅவனின் உள்ளம் பாவம்!அவளின் ஆணவப் பார்வையோ கோடீஸ்வரனின் துணையிருக்க, தனக்கேது கவலையென்றது!காதல் என்ற உண்மையை உணராதவள்தாலி என்ற புதிய தங்கத் துண்டிற்காவதுமரியாதை செலுத்தட்டுமே எனவாழ்த்தினது அவனின் அன்புள்ளம்!காமத்தால் கொச்சைப்படுத்தியும்பொருளாதார எடைமேடையால்தரம் பார்த்தும் தன்னை அசிங்கப்படுத்தி மகிழும்காதலை அறியாக் காதலர் பலரின்இன்றைய விளையாட்டால்கவலையில் வாடுகிறதே காதல்!

Wednesday, April 30, 2008

tamil news



வங்கக் கடலில் நர்கீஸ் புயல்

சென்னை
வங்க கடலில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதற்கு நர்கீஸ் எனப் பெயரிட்டுள்ளனர்.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. ஏப்ரல் 28 அன்று காலை 8.30 மணியளவில் சென்னைக்கு கிழக்கே 550 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு இருந்தது. இந்த புயல் சின்னத்துக்கு 'நர்கீஸ்' என்று பெயரிட்டு உள்ளனர்.
புயல் உருவாகி உள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகத்தில் 3ஆம் எண் எச்சரிக்கை கொடியும், பாம்பன், தூத்துக்குடியில் 2ஆம் எண் எச்சரிக்கை கொடியும் ஏற்றப்பட்டு உள்ளது. இந்தப் புயல் மேலும் தீவிரமடைந்து வட மேற்காக நகரும். புயல் சின்னம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ, அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், தமிழகத்தின் வடபகுதியில் 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதே போல், ஆந்திரா, கர்நாடகத்தின் தெற்கு உள்பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Tuesday, April 29, 2008