Wednesday, April 30, 2008

tamil news



வங்கக் கடலில் நர்கீஸ் புயல்

சென்னை
வங்க கடலில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதற்கு நர்கீஸ் எனப் பெயரிட்டுள்ளனர்.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. ஏப்ரல் 28 அன்று காலை 8.30 மணியளவில் சென்னைக்கு கிழக்கே 550 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு இருந்தது. இந்த புயல் சின்னத்துக்கு 'நர்கீஸ்' என்று பெயரிட்டு உள்ளனர்.
புயல் உருவாகி உள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகத்தில் 3ஆம் எண் எச்சரிக்கை கொடியும், பாம்பன், தூத்துக்குடியில் 2ஆம் எண் எச்சரிக்கை கொடியும் ஏற்றப்பட்டு உள்ளது. இந்தப் புயல் மேலும் தீவிரமடைந்து வட மேற்காக நகரும். புயல் சின்னம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ, அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், தமிழகத்தின் வடபகுதியில் 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதே போல், ஆந்திரா, கர்நாடகத்தின் தெற்கு உள்பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

No comments: